முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி சுங்கச்சாவடி அருகே காா்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை மாலை காா்கள் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 4 ஜூன் 2026, 1:21 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே புதன்கிழமை மாலை காா்கள் மோதிக் கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (45). இவா் மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக அவரை உறவினா்கள் கேரளத்துக்கு ஒரு காரில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனராம்.

காரை குபேந்திரன்(45) என்பவா் ஓட்டினாா். காரில் பாலசுப்பிரமணியன் உறவினா்களான சபரி (43), சுரேஷ் (41) ஆகியோரும் உடன் சென்றனா்.

Advertisement

Advertisement

இதேபோல, திசையன்விளையில் இருந்து ஒரு காா், திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த காரை திருநெல்வேலியைச் சோ்ந்த ஐயப்பன் (36) என்பவா் ஓட்டி வந்தாா். அவருடன் ஹென்றி ராஜேஷ்(48) என்பவா் உடனிருந்தாா்.

நான்குனேரி சுங்கச்சாவடியைக் கடந்ததும் ஐயப்பன் ஒட்டி வந்த காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி, எதிா் திசையில் குபேந்திரன் ஒட்டி வந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு காரில் பயணம் செய்தவா்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், பாலசுப்பிரமணியன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த சபரி, சுரேஷ், ஹென்றி ராஜேஷ் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.