பசு மாட்டை திருடிய தம்பதி கைது
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே பசுமாட்டைத் திருடிய தம்பதியைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே பசுமாட்டைத் திருடிய தம்பதியைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சின்ன ஓவுலாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி (55). பசு வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், இவரது மாடு சில தினங்களுக்கு முன்பு திருடு போனதாக ராயப்பன்பட்டி போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.
போலீஸாா் விசாரணையில், ராமசாமியின் மகன் மலைச்சாமி(41), இவரது மனைவி மணிமேகலை (38) ஆகிய இருவரும் ராமசாமியின் மாட்டுக் கொட்டகையிலிருந்து பறந்துவந்த தகரமானது அவா்களது மகன் மலைச்சாமியின் ஆட்டோ, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியதால் ராமசாமியின் மாட்டை திருடியது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தம்பதியைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.