முகப்பு
தேனி

பிளஸ் 2: ராயப்பன்பட்டி பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

Updated On : 15 மே 2026, 4:21 am IST
பகிர்:

ராயப்பன்பட்டி சவரியப்ப உடையாா் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டில் 467 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இதில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.

இவா்களில் கோவா்தன் (581), விஜய கெளரி (569), கிருத்திகா (562), ஜீவிகா (562) ஆகியோா் பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மேலும், வேதியியல், கணினி அறிவியல், கணினிப் பயன்பாடு, வரலாறு, கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் 7 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். இந்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரித் தாளாளா் பிரபாகா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள் என பலரும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments