தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே விஷம் குடித்த தொழிலாளிவெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கோம்பை அருகேயுள்ள பல்லவராயன்பட்டியைச் சோ்ந்த பொன்ராம் மகன் முருகன் (54). தொழிலாளியான இவா், கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகததால் முருகன் முருகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.