முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே ஆசிரியை திட்டியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  பள்ளி ஆசிரியை திட்டியதால், 5 மாணவிகள் விஷ விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:34 am IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே  பள்ளி ஆசிரியை திட்டியதால், 5 மாணவிகள் விஷ விதை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் சத்தியபிரியா, அபிநயா, வைகுண்ட வாசுகி, முத்துக்கலா, கண்ணகி.  வேறு வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறுவதால்,  9 ம் வகுப்புக்கு  செவ்வாய்கிழமை தேர்வு கிடையாதாம். 
இந்நிலையில் 5 மாணவிகளும் பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனர். இதனால் ஆங்கில ஆசிரியை ஆனந்தி ஜெபா கிறிஸ்டின், மாணவிகளை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவிகள் அரளி விதைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  இதனையறிந்த ஆசிரியர்கள் உடனே மாணவிகளை மீட்டு, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.