இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இலவச தேநீர்
ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும்
ராஜபாளையம் வழியாக சபரி மலைக்கு நள்ளிரவில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் கார், வேன், பேருந்து மூலம் திருமங்கலம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் வழியே தென்காசி, ஆரியங்காவு, புனலூர், கோட்டயம், பம்பை வழியாக சபரி மலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிலர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரவு நேரங்களில் செல்வது வழக்கமாகி விட்டது. நள்ளிரவில் தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நள்ளிரவில் சபரிமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இலவச தேநீர் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தொடக்கி வைத்தார். இதில் டி.எஸ்.பிக்கள் ராஜா, ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேநீர் வழங்கும் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இவ்வழியாக சபரிமலை செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.