முகப்பு
இந்தியா

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அவசரநிலை பற்றி சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு பற்றி..

Updated On : 25 ஜூன் 2026, 12:32 pm IST
குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

இந்திய வரலாற்றில் இருண்டு அத்தியாயங்களில் ஒன்றாக அவசரநிலையைக் கருதப்படுவதாகக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியலமைப்பின் 352-வது பிரிவின் கீழ், 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை இந்தியாவில் அவசரநிலை அமலில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் நிர்வாகத் துறைக்கு மேலான அதிகாரங்களை வழங்கியதோடு, மாநில அதிகாரங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

Advertisement

Advertisement

மோடி தலைமையிலான அரசு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாளை சம்பிதான் ஹத்யா திவாஸ் (அரசியலமைப்பு படுகொலை தினம்) ஆக அனுசரித்து வருகிறது.

அரசியலமைப்பு விழுமியங்கள் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தை நினைவூட்டும் ஒரு முக்கிய நிகழ்வாக அவசரநிலை விளங்குகிறது.

குடிமை உரிமைகள் முடக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், நமது ஜனநாயக கட்டமைப்பின் முக்கிய நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்பட்டன.

அரசியலமைப்பின் கொள்கைகள் மீதான தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துமாறும், நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த ஒரு இந்தியாவைத் தொடர்ந்து கட்டமைக்குமாறும் அவர் வலியுறுத்தினார். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Vice President C P Radhakrishnan on Thursday described the Emergency as one of the darkest chapters of Indian history and paid tributes to those who stood in defence of democratic values.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments