ஸ்ரீவில்லிபுத்தூரில் படைப்பரங்கம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பிலான மாதாந்திர எழுத்தாளர் மற்றும்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சார்பிலான மாதாந்திர எழுத்தாளர் மற்றும் படைப்பரங்கத்தின் 216 ஆவது கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எம்.என்.ஆர்.டி. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற ஸ்ரீவில்லிபுத்தூர் கிளையின் தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். இதில், திருப்பூர் எழுத்தாளர் செல்லம் ரகுவின் "விடியலின் முகவரிகள்' என்ற ஹைக் கூ நூல் மற்றும் "நினைக்க முளைக்கும் சிறகுகள்', "இனிதிலும் இனிது காதல்', "அன்பென்று கொட்டு முரசே' ஆகிய கவிதை நூல்கள் குறித்து புலவர் ப. வெள்ளை, கவிஞர் கந்தகப் பூக்கள் பூபதி, கவிஞர் சி. அன்னக்கொடி, பேராசிரியர் சு. திருநாவுக்கரசர், பெ. திருப்பதி ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
பின்னர், எழுத்தாளரை கெளரவித்து பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சமூகநல ஆர்வலர் நூர்சாகிபுரம் க. துள்ளுக்குட்டி, கவிஞர் ஆல. தமிழ்ப்பித்தன், கவிஞர் சந்திரசேகர், கவிஞர் க. அங்குராஜ், எழுத்தாளர் அபூர்வன் ராஜா, கிராமியக் கலைஞர் சு. ராமசாமி, மிருதங்க கலைஞர் சின்னமுத்து, இரா. தங்கமாரி, மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, செயலர் சி. முத்துக்குமார் வரவேற்றார். நிறைவாக, எழுத்தாளர்
செல்லம் ரகு ஏற்புரையாற்றினார். ப. அடைக்கலம் நன்றி கூறினார்.