சாத்தூரில் பிளேடால் கையை அறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிளேடால் தனது கையை அறுத்துக் கொண்டு இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.
சாத்தூர் ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் புதன்கிழமை காலை நடந்து சென்ற 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென தனது கையை பிளேடால் அறுத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த இளைஞர் சிறுது தூரம் நடந்து சென்று நடைமேடையிலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் இளைஞரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் ரயில்வே போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அனுப்பங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் (25) என்பதும், நண்பர்கள் தன்னிடம் பேசாத மனவருத்தத்தில் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.