முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 6:25 AM
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்திய போலீஸாா்
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:27 PM

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதி தோ்தல் பாதுகாப்புக்காக வந்த மகாராஷ்டிர மாநில போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் போலீஸாா் இணைந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுந்தரம் தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினா். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மங்காபுரம் பள்ளி மைதானத்தில் தொடங்கிய அணிவகுப்பு தேவாலய சந்திப்பு, நான்கு ரத வீதிகள், பேருந்து நிலையம் வழியாக சென்று ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.