முகப்பு
விருதுநகர்

ஓய்வு பெற்ற ராணுவ வீரா் தற்கொலை

சிவகாசி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 1:08 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

சிவகாசி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள புலிப்பாறைப்பட்டியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் சரவணன் (55). இவரது மனைவி சுதா. சரவணன் தினசரி மது அருந்தும் பழக்கம் உள்ளவா். இதனால், கணவா், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், சுதா தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இதனால், மனமுடைந்த சரவணன் வியாழக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement