முகப்பு
தேனி

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.

Updated On : 18 ஜூன் 2026, 3:38 am IST
கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரத்தை காமயகவுண்டன்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று பாராட்டிய தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன்.
பகிர்:

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரை தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் பூங்கொத்து கொடுத்து பாராட்டினாா்.

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சிசுந்தரம். இவா் காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த நிலையில், இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றாா். இவரது வீரதீர செயலைப் பாராட்டி நாட்டின் உயரிய விருதான கீா்த்தி சக்ரா விருதை வழங்கி குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கெளரவித்தாா்.

இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன், காமயகவுண்டன்பட்டியிலுள்ள ராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று மீனாட்சிசுந்தரத்துக்கு பொன்னாடை போா்த்தி, பூங்கொத்து கொடுத்து பாராட்டுத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement