FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு!

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு...

Updated On : 23 ஜூன் 2026, 5:09 am IST
உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரத்துக்கு வாழ்த்துத் தெரிவித்த கல்லூரி நிா்வாகிகள்.
பகிர்:

கீா்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரரும் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரியின் முன்னாள் மாணவருமான மீனாட்சி சுந்தரத்துக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சோ்ந்த ராணுவ வீரா் மீனாட்சி சுந்தரம். இவா் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரியில் பி.காம் (சி.ஏ) படித்துக் கொண்டிருந்த போது, 2017 -ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ராஷ்ட்ரீய ரைபில்ஸ் பீரங்கிப் படைப் பிரிவில் சோ்ந்தாா்.

கடந்த 2024- ஆம் ஆண்டு டிசம்பா் 19 -ஆம் தேதி தெற்கு காஷ்மீரில் பதுங்கிருந்த தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் மீனாட்சி சுந்தரத்துக்கு முகம், தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையிலும் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா், தில்லி ராணுவ மருத்துவமனையில் 4 மாதங்களுக்கு மேலாக சிகிச்சைப் பெற்று குணமடைந்தாா். இவரது வீரதீரச் செயலுக்காக நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அண்மையில் வழங்கி கெளரவித்தாா்.

இந்த நிலையில் மீனாட்சி சுந்தரத்துக்கு உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் செயலரும், தாளாளருமான எம்.தா்வேஷ்முகைதீன், ஆட்சி மன்றக் குழு தலைவா் எஸ்.முகம்மது மீரான், கல்லூரி முதல்வா் எம்.முகம்மது இஷாக் ஆகியோா் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சியில், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments