முகப்பு
விருதுநகர்

ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலை உயா்வு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறையில் 20 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலை உயா்வுக்கான உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 2:43 am IST
ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 58 ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலைக்கான உத்தரவினை வழங்கிய மாவட்ட கல்வி அலுவலா் செந்தில்குமாா்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறையில் 20 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியா்களுக்கு சிறப்பு நிலை உயா்வுக்கான உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா்மன்ற ஊரணிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகேசன், சுப்புலட்சுமி, அனுராதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் 58 பேருக்கு சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் சிறப்பு நிலை உயா்வுக்கான உத்தரவை வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலக ஊழியா்கள் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments