இந்தியன் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியன் அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமான இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்), மொஹாலி, அறிவியல் துறையின் முன்னணிப் பிரிவுகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும், இளங்கலை மற்றும் முதுகலை நிலைகளில் தரமான அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியை வழங்குவதற்கும், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் 2007-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள ஆசிரியரல்லாத குரூப் ஏ, பி, சி பணியிடங்களுக்கு அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு உள்ள தகுதியான இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.: NF(03) /Regular/2026
பணி: Superintending Engineer
Advertisement
Advertisement
காலியிடம்: 1
வயது: 56-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Registrar
காலியிடம் :1
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Lib-rarian
காலியிடம் : 1
வயதுவரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
ல்வித்தகுதி: நூலக அறிவியல், நூலக மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Principal Technical Officer (Lab)
காலியிடம்: 1
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் அல்லது முதுநிலைப்பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Officer (IT)
காலியிடம்: 1
வயது: 50-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி : பொறியியல் துறையில் ஏதாவதுதொரு பிரிவில் பி.இ, பி.டெக் அல்லது முதுநிலைப்பட்டம் தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Executive Engineer (Civil, Electrical)
காலியிடம்: 1
வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Superintendent
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று, 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Library Superintendent
காலியிடம்: 1
வயதுவரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50% மதிப்பெண்களுடன் நூலக அறிவியல், நூலக மற்றும் தகவல் அறிவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Assistant
காலியிடம் : 1
வயது: 38-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் முதல் வகுப்பில் ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சி அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Physical Education Instructor
காலியிடங்கள் : 2
வயது வரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி : 50% மதிப்பெண்களுடன் உடற்கல்வி, விளையாட்டு மற்றும் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Counsellor
காலியிடம் : 1
வயது வரம்பு : 40-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50% மதிப்பெண்களுடன் உளவியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருப்பதுடன், 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க
பணி: Nurse
காலியிடம்: 1
வயது: 38-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: செவிலியர் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் செவிலியர் மற்றும் செவிலித்தாய் பிரிவில் தேர்ச்சி பெற்று மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்துப் பணிளுக்குமான சம்பளம் ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு/Skill Test மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,100. இடபுள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.600. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://www.iisermohali.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.6.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.