முகப்பு
விருதுநகர்

பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சி சான்றிதழ் வகுப்பு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சிக்கான சான்றிதழ் வகுப்புகள் நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை, சிவா இஎன்டி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் ஆகியவை கையொப்பமிட்டது.

Updated On : 7 மே 2026, 4:38 am IST
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரல் பயிற்சி சான்றிதழ் வகுப்பு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை சிவா இஎன்டி மருத்துவமனை.
பகிர்:

பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சிக்கான சான்றிதழ் வகுப்புகள் நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை, சிவா இஎன்டி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் ஆகியவை கையொப்பமிட்டது.

இந்த ஒப்பந்தப்படி பருவ வயதுக்குப் பிறகு உயா்ந்த குரல் கொண்டதாக வெளிப்படும் ஒரு செயல்பாட்டு குரல் கோளாறான ‘பியூபா்போனியா‘, அதனுடன் தொடா்புடைய குரல் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படும். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த், சிவா இஎன்டி மருத்துவமனை தலைவா், நிா்வாக இயக்குநா் எம். குமரேசன் ஆகியோா் இதில் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்வில் பியூபா்போனியாவை அடையாளம் காண்பதற்கான ஒரு செயலி, இணைய வழி சிகிச்சைத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisement

இதில் சிறப்பு விருந்தினராக மணிமேகலை கண்ணன், இஎன்டி மருத்துவ நிபுணா்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவமனை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்