பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் தொடக்கம்
திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாசி மக உற்சவம் சனிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் மாசி மகத்தையொட்டி சுவாமி சமுத்திரத்தில் தீா்த்தவாரி நிகழ்வு உள்ளிட்டவைகளுடன் மாசி மக உற்சவம் நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழாவின் தொடக்கமாக சனிக்கிழமை காலை பெருமாள், பல்லக்கில் வீதியுலாவும், இரவு சூரிய சந்திர பிரபையில் வீதியுலாவும் நடைபெற்றது. 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ஹனுமந்த வாகனத்திலும், 19-ஆம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 20-ஆம் தேதி இரவு கருட சேவைம், 21-ஆம் தேதி இரவு யானை வாகனத்திலும், 22-ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழி சேவை, இரவு வெட்டுங்குதிரை வாகனத்திலும், 23-ஆம் தேதி இரவு சத்திய நாராயண பூஜை, 24-ஆம் தேதி காலை திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு பல்லக்கில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.