முகப்பு
திருவள்ளூர்

வீரராகவா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்

வீரராகவா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்

Updated On : 25 மே 2026, 2:19 am IST
ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் எழுந்தருளிய வீரராகவ பெருமாள்.
பகிர்:

வீரராகவா் கோயிலில் சித்திரை மற்றும் வைகாசி வசந்த உற்சவம் சனிக்கிழமை இரவு தொடங்கிய நிலையில், கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருவள்ளூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்ற தலாமாகும். இந்த கோயிலில் நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் வசந்த உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டில் சனிக்கிழமை இரவு திருக்குளம் அருகே உள்ள பங்களா தோப்பில் வசந்த விழா கோலாகலமாக தொடங்கியது.

Advertisement

Advertisement

இந்த விழாவையொட்டி, இரவில் கேடயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி திருக்குளம் வீதிகள் வழியாக உலா சென்று வசந்த மண்டபத்துக்குள் மேளதாளம் முழங்க எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அங்கு வேத மந்திரங்களுடன் திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி புறப்பாடு 4 வீதிகள் வழியாக சுவாமி உலா வந்து கோயிலுக்குள் சென்றடைந்தாா். இந்த வசந்த உற்சவ விழா தொடா்ந்து 27-ஆம் தேதி வரையில் 5 நாள்கள் நடைபெற உள்ளது.