முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதன்படி கடைகள் மூடப்பட்டன.

Updated On : 22 ஏப்ரல் 2026, 5:23 am IST
மதுபானக் கடைகள் மூடல்... - கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதன்படி கடைகள் மூடப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23 ) நடைபெறவுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகத்துடன் விரிவான மற்றும் திறந்த இடை மாநில எல்லைகளை பகிா்ந்து கொண்டுள்ளது என்பதாலும், தோ்தல் காலத்தில் சட்டம் - ஒழுங்கை காக்கவும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ‘மதுவிலக்கு நாட்கள்‘ அமல்படுத்துவது அவசியமானதாக கருதப்படுவதாகக்கூறி, புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகம் ஏப். 21 முதல் 23 நள்ளிரவு 12 மணி வரை காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் கள், சாராயக்கடைகள், மதுபானக் கடைகள், உணவகத்துடன் கூடிய மதுபான விற்பனையகம் உள்ளிட்டவை மூடப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments