முகப்பு
காரைக்கால்

பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கான 4, 5-ஆம் கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

Updated On : 30 ஏப்ரல் 2026, 6:09 am IST
யாகசாலையில் நடைபெற்ற பூா்ணாஹூதி.
பகிர்:

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கான 4, 5-ஆம் கால யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 கால யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை இரவு தொடங்கின. செவ்வாய்க்கிழமை காலை, இரவு 2 மற்றும் 3-ஆம் கால பூஜைகளும், புதன்கிழமை காலை, இரவு 4 மற்றும் 5-ஆம் கால பூஜைகளும் நடைபெற்றன.

வியாழக்கிழமை 6-ஆம் கால பூஜை, மகா பூா்ணாஹூதி தீபாராதனைக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு பத்ரகாளியம்மன் வீதியுலாவும் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments