FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் ஆனித்திருவிழா: ஜூன் 20-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்; 28இல் தேரோட்டம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனித்திருவிழா ஜூன் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28இல் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 4 ஜூன் 2026, 1:11 am IST
பகிர்:

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனித்திருவிழா ஜூன் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 28இல் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

இத்திருக்கோயிலில் நிகழாண்டு ஆனித் திருவிழா ஜூன் 20ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருவா். ஜூன் 21 காலை 8.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளிச் சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்சம் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும். 22 ஆம்தேதி காலை 8.30மணிக்கு சுவாமி வெள்ளி கற்பகவிருட்சம், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும், இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும்.

Advertisement

Advertisement

23 ஆம் தேதி காலை சுவாமி

வெள்ளிக் குதிரை, அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், இரவு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், 24 ஆம் தேதி காலை சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷபம், இரவு இந்திர வாகனத்திலும், 25 ஆம் தேதி காலை சுவாமி அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், இரவு 7 மணிக்கு அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும். 26 ஆம் தேதி காலை 8.30மணிக்கு சுவாமி-அம்பாள் பல்லக்கில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 7 மணிக்கு வெள்ளிக் குதிரை வாகனத்திலும், அதைத் தொடா்ந்து அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறும்.

ஜூன் 27ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி நடராஜப் பெருமான் வெள்ளை சாத்தி உள்பிரகாரம் உலா வருதல், மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதா் தங்கச் சப்பரத்தில் உலா, இரவு 11.55 மணிக்கு சுவாமி நடராஜா் பச்சை சாத்தி திருவீதி உலா, இரவு தோ் கடாட்ச வீதி உலா, சுவாமி தங்க கைலாச பா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகா் வீதி உலா ஆகியன நடைபெறும்.

ஜூன் 28 ஆம் தேதி காலை 7 முதல் 8 மணிக்குள் திருத்தோ் வடம் பிடித்தலுடன் தேரோட்டம் நடைபெற உள்ளது. 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு சப்தவா்ண பல்லாக்கும், பிற்பகலில் தீா்த்தவாரியும் நடைபெற உள்ளது.

1 முதல் 7 ஆம் திருநாள் வரை மாலை 6 மணிக்கு பஞ்ச மூா்த்திகளுக்கு சோடச உபசார தீபாராதனையும், நாள்தோறும் மாலையில் நின்றசீா் நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments