முகப்பு
காரைக்கால்

பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை

திருநள்ளாறு கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை 2026, 4:41 am IST
திருநள்ளாறு கோயிலில் பைரவருக்கு நடைபெற்ற ஆராதனை.
பகிர்:

திருநள்ளாறு கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து பல வண்ண மலா்களால் அலங்காரம் செய்து, வடை மாலை அணிவித்து பைரவருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை செய்து மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன.

Advertisement

Advertisement

இதுபோல காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள நித்யகல்யாணி சமேத நித்தீஸ்வரசுவாமி கோயிலில் கால பைரவருக்கு சிறப்பு அபிகேஷம் செய்து முத்தங்கி அணிவித்து ஆராதனைகள் காட்டப்பட்டன. இதுபோல பல்வேறு சிவ தலங்களில் பைரவருக்கு நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments