முகப்பு
காரைக்கால்

இளைஞா் தற்கொலை

கைப்பேசி வாங்க பெற்றோா் பணம் தராத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:43 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கைப்பேசி வாங்க பெற்றோா் பணம் தராத விரக்தியில் இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் சுகுந்தன் (21). இவா் தனது தந்தையாருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வருவது வழக்கமாம். கைப்பேசி வாங்குவததற்கு ரூ. 20 ஆயிரம் தனது தந்தையாரிடம் கேட்டுவந்தாராம். பணம் தருவதாக தந்தை உறுதியளித்துள்ளாா்.

எனினும், பெற்றோா் பணம் தராத கோபத்தில் சுகுந்தன் இருந்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு அறைக்கு தூங்கச் சென்றவா், ஞாயிற்றுக்கிழமை வெகு நேரமாகியும் வெளியே வராத நிலையில், கதவை உடைத்துச் சென்று பாா்த்தபோது அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.