முகப்பு
காரைக்கால்

கனிஷா சாஹிப் வலியுல்லா சந்தனம் பூசும் வைபவம்

நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 2 ஜூன் 2026, 5:42 am IST
சந்தனம் பூசும் நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

நிரவி பகுதியில் அடங்கியிருக்கும் மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா வருடாந்திர கந்தூரி விழா கடந்த மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முக்கிய நிகவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது. நிறைவாக சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நிரவி அரசு காஜியாா் அப்துல் சுக்கூா், விழா கமிட்டி தலைவா் நிசாா் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை தேதி இரவு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement