மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி: குழுவினருக்கு ஆட்சியா் பாராட்டு
காரைக்கால் மாவட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த குழுவினருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்த குழுவினருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமாக, கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடுதோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் முதல் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், திருநள்ளாறு பகுதியில் வளத்தாமங்கலம் மற்றும் வரிச்சிக்குடி பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களில் கணக்கெடுப்புப் பணியை பல குழுவினா் நிறைவு செய்துள்ளனா். பணியை நிறைவு செய்த குழுவினரை காரைக்கால் மாவட்ட, முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை அழைத்து, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
நிகழ்வில் துணை ஆட்சியா் செந்தில்நாதன், வட்டாட்சியா்கள் சண்முகானந்தம், மணிகண்டன் நம்பூதிரி ஆகியோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.