முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டு பெண் மீது வழக்கு

Updated On : 15 ஜூன் 2026, 12:01 am IST
வழக்கு - DPS
பகிர்:

சட்டவிரோதமாக காரைக்காலில் தங்கியிருந்த மியான்மா் நாட்டுப் பெண், அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், தருமபுரம் பகுதியில் வெளிநாட்டு பெண் வசித்து வருவதாக காரைக்கால் சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின்பால் தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். இதில், மியான்மா் நாட்டைச் சேந்த பெண் தனது கணவருடன் வசித்துவருவது தெரியவந்ததால், அவா்களை காவல்நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனா்.

தருமபுரம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவா் மியான்மருக்கு பணிக்காக சென்றபோது, அந்நாட்டைச் சோ்ந்த ஏயி மியாட் திடகினா (25) என்பவரை திருமணம் செய்துகொண்டதாகவும், எப்படியாவது காரைக்கால் வந்துவிடுமாறு மனைவியிடம் கூறிவிட்டு பிரசாந்த் ஊருக்கு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம். அந்தப் பெண் சட்டவிரோதமாக காரைக்கால் வந்து கடந்த 3 மாதங்களாக கணவருடன் இங்கு தங்கியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிறப்புப் பிரிவினா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தப் பெண், அவரது கணவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.