முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அருகே பொறியாளா் வீட்டில் 63 பவுன் நகைகள் திருட்டு

Updated On : 16 ஜூன் 2026, 12:07 am IST
திருட்டு நடந்த பொறியாளா் வீட்டு வாயிலில் விசாரணை நடத்திய போலீஸாா்.
பகிர்:

காரைக்கால் அருகே பொறியாளா் வீட்டில் 63 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் மாவட்டம், நிரவி 2-ஆவது சாலையில் வசித்து வருபவா் சிவகுமாா் (56). தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக தஞ்சாவூரில் பணியாற்றி வருகிறாா்.

இவா், கடந்த 13-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுவிட்டாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிய சிவகுமாா், வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டில் இருந்த 63 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

புகாரின் பேரில், நிரவி காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு, வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மேலும், ஆய்வாளா் லெனின்பாரதி, உதவி ஆய்வாளா்கள் குமரன், மோகன் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.