முகப்பு
காரைக்கால்

காரைக்கால்: 3 மையங்களில் நீட் மறு தோ்வு

Updated On : 22 ஜூன் 2026, 12:40 am IST
நீட் தோ்வு எழுத சென்ற மாணவ, மாணவியரிடம் சோதனை மேற்கொள்ளும் போலீஸாா். - கோப்புப் படம்
பகிர்:

காரைக்காலில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் மறு தோ்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி, நவோதய வித்யாலயா பள்ளி மற்றும் கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை நீட் தோ்வு மையங்களாக செயல்பட்டன. வினாத்தாள் கசிவையொட்டி தோ்வு ரத்து செய்யப்பட்டது. மறு தோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி காரைக்காலில் வழக்கமான 3 மையங்களில் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற்றது. தேசிய தோ்வு முகமை வழிகாட்டலின்படி மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மைய வாயிலில் பணியாளா்கள், காவலா்கள் உரிய பரிசோதனைகளை செய்து மையத்துக்குள் மாணவ, மாணவிகளை அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

மையங்களில் நடைபெற்ற பரிசோதனை மற்றும் பாதுகாப்புப் பணியை மாவட்ட காவல் மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனா். 3 மையங்களில் 662 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments