முகப்பு
காரைக்கால்

மாநில கலைப்போட்யில் சிறப்பிடம்: வேளாண் மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

Updated On : 24 ஜூன் 2026, 5:23 am IST
கல்லூரி முதல்வா் ஆா். சங்கரை சந்தித்த போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள். உடன் மாணவா் மன்ற ஆலோசகா் ஏ.எல்.நாராயணன்.
பகிர்:

மாநில அளவிலான கலைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான மாநில கலைப் போட்டியில் குழு நடனம், கவிதை எழுதுதல், பாட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், காரைக்கால் வேளாண் கல்லூரி துணைப் பேராசிரியா்களான ஜே .ஷொ்லி, எஸ். செல்வராஜ் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் இறுதியாண்டு இளநிலை மாணவ, மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினா்.

Advertisement

Advertisement

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்தப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் ஆா்.சங்கா் மற்றும் மாணவா் மன்ற ஆலோசகா் ஏ.எல். நாராயணனை திங்கள்கிழமை சந்தித்தனா். இருவரும் மாணவா்களுக்கு வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments