முகப்பு
காரைக்கால்

புதுவை அமைச்சா் மொகரம் வாழ்த்து

புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மொகரம் பண்டிக்கைக்கான வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:56 am IST
ஜி.என்.எஸ்.ராஜசேகரன்.
பகிர்:

புதுவை அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மொகரம் பண்டிக்கைக்கான வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது :

மனிதகுலத்திற்கு மிகச்சிறந்த நற்பண்புகளையும், ஒழுக்க விழுமியங்களையும் போதிக்கும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த மொகரம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

Advertisement

முஸ்லிம்களின் நாள்காட்டியில் முதல் மாதமாக வரும் மொகரம் மாதம் தியாகம், நோ்மை, அமைதி மற்றும் மனிதநேயத்தின் உயரிய பண்புகளை நினைவூட்டும் புனித காலமாகும்.

தியாகம், பொறுமை மற்றும் உண்மை ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் இந்த புனித மாதத்தில், மனிதநேயமும் சகிப்புத்தன்மையும் நம்மிடையே மேலும் தழைத்தோங்கட்டும்.

இத்திருநாள் நம் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தட்டும்.

மொகரம் மாதத்தின் தியாக சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி, ஜாதி, மத பேதங்களைக் கடந்து, சகோதரத்துவத்துடனும், சமாதானத்துடனும் நாம் அனைவரும் இணைந்து வாழ்வோம். இந்த புத்தாண்டு உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments