பெருக்கல் வாய்ப்பாடு : சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு
பெருக்கல் வாய்ப்பாடு போட்டியில் சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பெருக்கல் வாய்ப்பாடு போட்டியில் சாதனைப் படைத்த அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய விருது பெற்ற பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி கனிஷ்கா தேவி. இவா் ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ஸ் என்கிற அமைப்பின் போட்டியில், 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்று, 160 விநாடிகளில் 20 பெருக்கல் வாய்ப்பாடுகளை துல்லியமாகக் கூறி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். இவா் ஏற்கெனவே, 10 நிமிடங்களில் 216 திருக்குறள்களை ஒப்பித்து ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் போட்டியில் சாதனை படைத்தாா்.
தொடா்ந்து இதுபோல சாதனை படைத்துவரும் மாணவிக்கு, பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன், மாணவி கனிஷ்கா தேவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து, பாராட்டை தெரிவித்தாா். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.