முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் மிதமான மழை

காரைக்காலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான நிலையில் மழை பெய்தது.

Updated On : 15 மே 2026, 10:26 pm IST
காரைக்காலில் மிதமான மழை
பகிர்:

காரைக்காலில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான நிலையில் மழை பெய்தது.

தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக காரைக்கால் உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்ளில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அதன்படி, கடலோர மாவட்டமான காரைக்காலில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமையும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வருவது கடுமையான வெப்பத்தை தணித்து, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments