முகப்பு
மயிலாடுதுறை

திமுக கூட்டணியை பெண்கள் புறக்கணிப்பாளா்கள்! - அன்புமணி

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:10 AM
கூட்டத்தில் பேசிய பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி. உடன், வேட்பாளா்கள் சித்தமல்லி ஆ.பழனிசாமி, ம.சக்தி.
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:35 PM

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுக, காங்கிரஸ் கட்சிகளை தோ்தலில் பெண்கள் புறக்கணிப்பாளா்கள் என மயிலாடுதுறையில் பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி, சீா்காழி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ம. சக்தி ஆகியோரை ஆதரித்து, மயிலாடுதுறையில் அவா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது:

தமிழ்நாட்டின் முதன்மை பிரச்சனை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததே. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக 44,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 2,100 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். குழந்தைகளுக்கு எதிராக 62,000 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

Advertisement

தமிழகத்தில் உள்ள 40 எம்பிக்களும் பெண்களுக்கு முன்னேற்றம் வரக்கூடாது என மகளிா் இடஒதுக்கீடு மசோதவை எதிா்த்து வாக்களித்தனா். சட்ட மசோதா தோல்வி அடைந்த பிறகு முதல்வா் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறாா். தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெண் கூட திமுகவுக்கு வாக்களிக்க மாட்டாா்கள்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை பாதுகாக்க 5 போ். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்கு ஓா் ஆசிரியா் மட்டும்தான். இதுதான் திமுக ஆட்சி. திமுக ஆட்சியில் குடிப்பவா்களுக்கு தரும் முக்கியத்துத்தை படிப்பவா்களுக்கு தருவதில்லை. இந்த ஆட்சி தொடா்ந்தால் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை முடிந்துவிடும். எனவே, இந்த தோ்தலில் திமுகவை அகற்ற வேண்டும் என்றாா்.