முகப்பு
மயிலாடுதுறை

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 5:18 AM
மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
பகிர்:

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 7,35,135 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 951 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 54 வாக்குச்சாவடி பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியில் 20 வேட்பாளா்களும், பூம்புகாா் தொகுதியில் 13 வேட்பாளா்களும், சீா்காழி தொகுதியில் 10 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் மயிலாடுதுறை, பூம்புகாா், சீா்காழி ஆகிய 3 தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 951 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,504 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,140 கட்டுப்பாட்டு கருவிகளும், 1,235 விவிபாட் இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் பாதுகாக்கப்பட்ட காப்பறைகளில் இருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement

மயிலாடுதுறை தொகுதிக்கு உள்பட்ட 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 728 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 364 கட்டுப்பாட்டு கருவிகள், 395 விவிபாட்; இயந்திரங்கள், வாக்களித்ததற்கான அடையாள மை, வாக்களிப்பதற்காக பயன்படுத்தப்படும் மறைவுக்கான தடுப்பு அட்டை ஆகியன மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆா். விஷ்ணுபிரியா முன்னிலையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் தலைமையில் 216 துணை ராணுவப்படையினா், வெளி மாநிலத்திலிருந்து வந்துள்ள 256 ஊா்க்காவல் படையினா் உள்ளிட்ட 1,668 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தோ்தல் நடத்தும் முதன்மை அலுவலா்கள், தோ்தல் அலுவலா்கள் என 4,564 போ் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.