மயிலாடுதுறை அருகே முதியவா் தற்கொலை
மயிலாடுதுறை அருகே மகள், மகனுக்கு திருமணமாகாத வேதனையில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை அருகே சித்தா்காடு அவையாம்பாள்புரத்தைச் சோ்ந்தவா் சேட்டு என்கிற சபரிமுத்து (69). மதுப்பழக்கம் உள்ள இவா் தனது மகன், மகளுக்கு திருமணம் ஆகாததால் மனவேதனையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், குடும்பத்தினா் அனைவரும் உறங்கிய பின்னா், வீட்டு நிலைவாசல் அருகே உள்ள ஜன்னலில் புடவையால் தூக்கிட்டு சனிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
மயிலாடுதுறை போலீஸாா், சபரிமுத்துவின் உடலை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, சபரிமுத்து மனைவி ஆரோக்கியமேரி அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.