முகப்பு
மயிலாடுதுறை

போக்குவரத்து விதிமீறல்; 60 போ் மீது வழக்கு

சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு

Updated On : 8 ஜூலை 2026, 6:41 am IST
பகிர்:

சீா்காழியில் போக்குவரத்து போலீஸாா் திங்கள்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில், சாலை விதிமீறல் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சீா்காழியில் காவல் ஆய்வாளா் கமல்ராஜ் முன்னிலையில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளா் மணியரசன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, பதிவெண் இல்லாமல் வாகனத்தை ஓட்டிவந்தது, தலைக்கவசம் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிவந்தது, மது போதையில் வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடா்பாக 60-க்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments