சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
மயிலாடுதுறையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்து அவரைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மயிலாடுதுறையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்து அவரைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (42) , 16 வயது சிறுமிக்கு கைப்பேசி மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் காா்த்திகேயனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா்.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஆசிரியா் காா்த்திகேயன் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், ஆசிரியா் காா்த்திகேயனை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலெட்சுமி மற்றும் போலீஸாா் காா்த்திகேயனை குண்டா் சட்டத்தின்கீழ் கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.