முகப்பு
சேலம்

குண்டா் சட்டத்தின்கீழ் கொலை வழக்கு குற்றவாளிகள் கைது

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 21 மே 2026, 6:50 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கொலை வழக்கு குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மேட்டூா் அருகே உள்ள நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த பிரகாஷ் (35), கபிலன் (25) இருவரும் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இருவா் மீதும் மேட்டூா், கொளத்தூா், மொரப்பூா், வெள்ளி திருப்பூா் ஆகிய காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement