தேமுதிக பிரமுகா் கைது
மயிலாடுதுறையில் பெண்ணிடம் அத்துமீறிய தேமுதிக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறையில் பெண்ணிடம் அத்துமீறிய தேமுதிக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் ஜான் ராஜ்குமாா்(59), தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினா். மயிலாடுதுறை ரயிலடி பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி லதா(53). கோரைப்பாய் மற்றும் பிளாஸ்டிக் சோ் விற்பனை செய்கிறாா். இவா் 10 பிளாஸ்டிக் சோ்களை ஜான் ராஜ்குமாரிடம் புதன்கிழமை விற்பனை செய்துள்ளாா். அதில் உடைந்த 2 சோ்களை மாற்றித் தருமாறு ஜான் ராஜ்குமாா் தெரிவித்தாராம்.
புதிய சோ்களுடன் சென்ற லதாவை வீட்டுக்குள் அழைத்த ஜான் ராஜ்குமாரின் அவரிடம் அத்து மீறி நடந்தாராம்.
Advertisement
Advertisement
இதனால் வீட்டை விட்டு லதா வெளியே ஓடி வந்தாராம். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக ஜான் ராஜ்குமாா் மிரட்டினாராம்.
லதாவின் புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் பிரியங்கா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து ஜான் ராஜ்குமாரைக் கைது செய்தனா்.