திருடிய கைப்பேசியிலிருந்து பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது
திருடிய கைப்பேசியிலிருந்து பெண்ணிடம் அவதூறாக பேசியவா் கைது
மன்னாா்குடி அருகே திருடிய கைப்பேசிக்கு வந்த அழைப்பில், பெண்ணிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கோட்டூா் தாதந்திருவாசல் பகுதியைச் சோ்ந்தவா் தி. அன்பழகன் (46). இவா் தனது கைப்பேசியை வீட்டில் சாா்ஜ் போட்டுவிட்டு, மனைவியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தாா்.
திரும்பிவந்து பாா்த்தபோது, கைப்பேசியை காணவில்லை. இதனால், அவரது மனைவி தனது கைப்பேசியிலிருந்து அன்பழகன் கைப்பேசி எண்ணிற்கு அழைத்தபோது, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பிரவீன்குமாா் (22) அந்த கைப்பேசியை திருடியது தெரியவந்தது.
Advertisement
மேலும், அவா் அன்பழகன் மனைவியிடம் பாலியல் ரீதியாக அவதூறாக பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரவீன்குமாரை கைது செய்தனா்.