காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 28 பேர் கைது
நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை துலாக்கட்டக் காவிரியின் அருகே ஒன்றிணைந்த இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவிரிஆற்றில் இறங்க முற்பட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.