முகப்பு
நாகப்பட்டினம்

காவிரி விவகாரம்: எல்.ஐ.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் 

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:46 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நாகை எல்.ஐ.சி. அலுவகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், கீழ்வேளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் நாகை மாலி, மாநிலக் குழு உறுப்பினர்கள் வி. மாரிமுத்து, ஏ.வி. முருகையன்,  மதிமுக ஒன்றியச் செயலாளர் ஜி. அய்யாப்பிள்ளை, தமுமுக மாவட்டச் செயலாளர் ஜபருல்லா, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி இப்ராஹிம் மற்றும் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments