முகப்பு
நாகப்பட்டினம்

இரு பிரிவினரிடையே மோதல்: 4 பேர் காயம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ளே முட்டம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:53 am IST
பகிர்:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ளே முட்டம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.
மயிலாடுதுறை வட்டம், பெரம்பூர் காவல் சரகம், முட்டம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சம்பத்குமார் (22). இவரது சகோதரியை முட்டம் மேலத்தெருவைச் சேர்ந்த கல்யாண்குமார் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் முட்டம் கிராமத்துக்குச் சென்று விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, கல்யாண்குமார் தரப்பைச் சேர்ந்த இ. தெய்வநாயகம், ரா. கணிவண்ணன், ரா. கரிகாலன், ஜாக்கி (எ) மாணிக்கம், கா. தினேஷ், க. குமார் உள்ளிட்டோர் திங்கிள்கிழமை சம்பத்குமார் வீட்டுக்குச் சென்று அவரது சகோதரி ராதிகாவைத் தாக்கி மானபங்கம் செய்தனராம்.
அத்துடன் மேலத்தெருவைச் சேர்ந்த பா. ராஜா (36), சாந்தி (45), சம்பத்குமார் ஆகியோரை அரிவாளால் வெட்டி காயப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தினராம்.
இதில், காயமடைந்த 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து சம்பத்குமார் அளித்த புகாரின் பேரில், கல்யாண்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.