குருகுலத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகள் சேர்க்கை
நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் ஏழை எளிய, ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கி இலவசமாக கல்வி பயில சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் ஏழை எளிய, ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கி இலவசமாக கல்வி பயில சேர்க்கை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குருகுல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அ. வேதரத்தனம் வெளியிட்ட அறிக்கை: குருகுலத்தில் தங்கி 1 முதல் பிளஸ் 2 வரை இலவச கல்வி கற்க 2018-19 ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய வறுமையில் உள்ள குடும்ப பெண்கள், ஆதரவற்ற பெண்கள் விடுதியில் தங்கி படிக்கலாம். உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம், குழந்தைகள் இல்லம், வேதாரண்யம்-6147810 என்ற முகவரியில் அல்லது 04369-250011 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.