வைத்தீஸ்வரன்கோயிலில் பாமகவினர் சிறப்பு வழிபாடு
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு நலம் பெற வேண்டி, சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு நலம் பெற வேண்டி, சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் உடல் நலம் பெறவேண்டி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் லண்டன். அன்பழகன் தலைமையில், வைத்தீஸ்வரன்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தையல்நாயகிஅம்மன் சமேத வைத்தியநாதசுவாமி, செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு ஜெ. குரு பெயரில் சங்கல்பம் செய்து, பாமகவினர் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில் நகரத் தலைவர் தில்லைகன்ராஜ், செயலாளர்கள் சுசீந்திரன், பி.எஸ். குமார், மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெ. இளங்கோவன், நேதாஜி, வன்னியர் சங்க மாவட்டத் தலைவர் சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.