"கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டம் தொடரும்'
கிராம நிர்வாக அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படவில்லை எனவும்,
கிராம நிர்வாக அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படவில்லை எனவும், தொடர்ந்து நடைபெறுவதாகவும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்று விட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மறுக்கிறது. எங்களது சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.