கிறிஸ்துமஸ்: நாகை எம்எல்ஏ வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத்
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. தமிமுன்அன்சாரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உலகின் மிகப் பெரிய பண்டிகைகளுள் கிறிஸ்துமஸ் முதன்மையான ஒன்றாகத் திகழ்கிறது. அன்பின் வடிவமாக இப்பண்டிகையை உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ பெருமக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்திய திருநாட்டில் கல்வி, மருத்துவம் வழியாக மாபெரும் மாற்றங்களுக்கு அடிகோலியவர்கள் என்ற வகையில் கிறிஸ்தவ பெருமக்கள் ஆற்றிவரும் சேவைகள் மகத்தானவை. அதுபோல், சமூக நல்லிணக்கத்துக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் துணை நிற்பவர்களாகவும் திகழ்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் நடத்திவரும் கல்வி சாலைகள் அறிவுப் புரட்சிக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் வழிகாட்டுகிறது. சேவை நிறுவனங்கள் மனிதநேயத்தை வளர்க்கின்றன. இதையெல்லாம் பாழ்படுத்த துடிக்கும் தீய சக்திகளை முறியடிக்கவேண்டும். கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.