முகப்பு
நாகப்பட்டினம்

நினைவு தினம்: பெரியார் சிலைக்கு மரியாதை

நாகை மாவட்டம், குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை

Updated On : 25 டிசம்பர் 2018, 8:48 am IST
பகிர்:

நாகை மாவட்டம், குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பெரியார் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
குத்தாலத்தில்: குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு  திமுக சார்பில் கொள்கை பரப்பு துணைச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான க. அன்பழகன், ஒன்றியச் செயலர்கள் முருகப்பா, சங்கர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திராவிடர் கழகம் சார்பில், அதன் நிர்வாகி முருகையன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர காங்கிரஸ் துணைச் செயலர் சண்முகம் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குத்தாலம் அஞ்சாறுவார்த்தலையில் உள்ள பெரியாரின்  சிலைக்கு அதிமுக சார்பில் மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலர் சி. ராஜேந்திரன், நகர செயலர் எம்.சி. பாலு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செம்பனார்கோவில்: செம்பனார்கோவில் கீழமுக்கூட்டில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிட கழக மாவட்ட துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து, ஒன்றியச் செயலர் கனகலிங்கம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன், ஊராட்சி முன்னாள் தலைவர் ஷீலாராஜேந்தர், ஒன்றியக் குழு உறுப்பினர் உஷா ராமநாதன், திமுக பொறுப்பாளர் ராம. அருள் உள்ளிட்டோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். 
சீர்காழியில்: சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் ரவிச்சந்திரன் தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தேவா, முன்னாள் மாவட்டச் செயலர் ஸ்டாலின், கொள்ளிடம் ஒன்றிய பொறுப்பாளர் சக்திவேல், சீர்காழி ஒன்றிய பொறுப்பாளர்  மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments