ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்கக் கோரிக்கை
ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், கீழ்வேளூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆ. நடராஜன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் டி. கணேசன் பேரவையைத் தொடங்கி வைத்துப் பேசினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் பி. ஜீவானந்தம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இதில் மாவட்ட இணைச் செயலாளர் கே. குப்புசாமி, செயலாளர் சொ. கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பொ. ஆசைத்தம்பி, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செல்வராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி, தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் சு. சிவகுமார், அங்கன்வாடி ஊழியர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் பி. புவனேஸ்வரி, பள்ளி- கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.என். பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் வி. பாலசுப்பிரமணியன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட முன்னாள் அமைப்பாளர் ச. மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஒப்பந்த முறையை ரத்து செய்து, அரசுக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையைச் செயல்படுத்த வேண்டும். 21 மாதக் கால ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1,000 மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.