தொழில் நிறுவனங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு: நாகையில் நாளை கலந்துரையாடல்
தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குக் கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு வழங்குவது குறித்து விளக்கும் கலந்துரையாடல் கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.
தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குக் கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பு வழங்குவது குறித்து விளக்கும் கலந்துரையாடல் கூட்டம் நாகையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நாகை பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் அலுவலகம் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்புக்குள்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களில், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைக்கான குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பக் கடிதங்கள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டம் குறித்து விளக்கும் கலந்துரையாடல் கூட்டம், நாகை, வெளிப்பாளையம், பொது அலுவலக சாலையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று, உரிய விளக்கங்களைப் பெற்று, குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு குடிநீர் வடிகால் வாரிய மயிலாடுதுறை, நாகை உதவி நிர்வாகப் பொறியாளர்களை 82489 23645, 98424 54202 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.